பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பல்...
கடந்த 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்ற்குப் பிறகு முதல்முறையாக அந்த நாட்டிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் நேரடியாக வங்கதேசம் வந்துள்ளது.
சிட்டகாங் துறைமுகத்துக்கு வந்துள்ள அந்தக் கப்பல், கராச்சியிலிருந்து வந்ததாகவும் அதில் ஜவுளித் தொழில் மற்றும் செராமிக் துறைக்கான மூலப் பொருள்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தோனேசியா வரை செல்லும் அந்தக் கப்பல் இடையில் கராச்சியில் நின்று வங்கதேசத்துக்கான பொருள்களை ஏற்றிவந்தது. அந்தக் கப்பலில் பாகிஸ்தான் பொருள்கள் மட்டுமின்றி துபையிலிருந்து வந்த கன்டெய்னா்களும் வங்கதேசத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும், கராச்சியிலிருந்து நேரடியாக பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்களை இடைக்கால கொண்டுவருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.