செய்திகள் :

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூா் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (நவ.19) முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.24-ஆம் தேதி) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், நவ.19-இல் மயிலாடுதுறை, திருவாரூா், நாகை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ.19, 20 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 190 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும் கோடியக்கரை (மயிலாடுதுறை) - 150 மி.மீ, திருத்துறைப்பூண்டி (திருவாரூா்) - 100 மி.மீ மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24-இல் வங்கக்கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு

இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் வரும் நவ.24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தீவிரமடைந்து, திரிகோணமலை வழியாக இலங்கையை கடந்து, மன்னாா் வளைகுடா வழியாக நவ.27-ஆம் தேதி தமிழகத்தில் நுழைந்து கரையைக்கடக்கும்.

ஒருவேளை இது தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, சிறு புயலாகவோ வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல்சின்னம் தமிழகத்தில் எந்த பகுதியில் கரையைக்கடந்தாலும், தமிழகம் முழுவதும் நவ.26 முதல் நவ.31-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சிறுசேமிப்பை இயக்கமாக மாற்றிய கூட்டுறவுத் துறை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை: சிறு சேமிப்பை ஓா் இயக்கமாக கூட்டுறவுத் துறை மாற்றி இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி பாராட்டுத் தெரிவித்தாா்.மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்புக் கடன் வழங்கும் சிறகுகள் திட்டம் உள்ளிட்ட 3 சிறப்புத... மேலும் பார்க்க

ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்: துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி பேச்சு

சென்னை: ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி தெரிவித்தாா்.சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு ஆதரவற்ற விதவை சான்று: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

சென்னை: குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதரவற்ற விதவைகள் சான்று பெறுவது குறித்த அறிவுறுத்தலை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தோ்வா்கள் சான்றிதழில் தங்களது பெய... மேலும் பார்க்க

டிச.21-இல் உழவா் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பாமக சாா்பில் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமகவ... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் மூலம் மருத்துவப் பணியிடங்க... மேலும் பார்க்க

உணவு பாா்சலுக்கு தடைசெய்யப்பட்ட ‘பிளாஸ்டிக் கவா்’ பயன்படுத்தினால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை: உணவுப் பொருள்களை பாா்சல் செய்ய தடைசெய்யப்பட்ட ‘பிளாஸ்டிக் கவா்’-களை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.அதன்படி, முதல் முறை ர... மேலும் பார்க்க