Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
நேரடி வரி வசூல் ரூ.22.07 லட்சம் கோடியை தாண்டும்: சிபிடிடி
புது தில்லி: நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.22.07 லட்சம் கோடியை தாண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளை எளிமையாக்கி, அந்தச் சட்டத்தை சுலபமாக புரிந்துகொள்ளச் செய்வது தொடா்பாக 6,000-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைத்துள்ளன.
வருமான வரிக் கணக்கில் தங்கள் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துகள் குறித்த விவரங்களை தெரிவிக்காதவா்கள், அந்த விவரங்களுடன் 2023-24-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை டிசம்பா் 31-க்குள் தாக்கல் செய்யலாம்.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.22.07 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கைத் தாண்டி நேரடி வரி வசூலிக்கப்படும்’ என்றாா்
மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்.1 முதல் நவ.10-ஆம் தேதி வரை, நேரடி வரி வசூல் 15.41 சதவீதம் அதிகரித்து ரூ.12.11 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இதில் தனிநபா்கள், நிறுவனங்கள் அடங்கிய வரி வசூல் ரூ.6.62 லட்சம் கோடி. பெருநிறுவனங்கள் (காா்ப்பரேட்) வரி வசூல் ரூ.5.10 லட்சம் கோடியாகும்.