விராலூா் பெருமாள் கோயில்: கும்பாபிஷேக விழா முகூா்த்தக்கால் நடவு
விராலிமலை அடுத்துள்ள விராலூா் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலூரில் உள்ள பெருமாள் கோயிலில் கடந்த 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 2023 பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து குடமுழுக்கு விழா பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில், ஸ்ரீரங்கம் நரசிம்மன்பட்டா், விஜிகுருக்கள் தலைமையில் பூஜைகள் செய்து யாக சாலை பணிகள் தொடங்கின.
விழாவில் விராலிமலை திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் அய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் பழனியாண்டி, துணைத் தலைவா் சாவித்திரி நாகராஜ், பூபாலன், மாரியப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.