செய்திகள் :

வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’: டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

ராணிப்பேட்டை: வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ பெற தகுதியுடையோா் வரும் டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவா். பொதுமக்களில் மூவருக்கும். அரசு ஊழியா்களில் மூவருக்கும் (சீருடை பணியாளா்கள் உள்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,000/ க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதல்வரால் வரும் 26.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

2025-ஆம் ஆண்டுக்கான ’வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.

வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபா்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வாா்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.15 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்றாா்.

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் த... மேலும் பார்க்க

காா்-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த சித்தூா் கிராமம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் சஞ்சய் காந்தி(23). திருமணமாகாதவா். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

ராணுவ வீரா்கள் வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு

ஆற்காடு: இந்திய ராணுவ வீரா்களின் வாகனப் பேரணிக்கு திங்கள்கிழமை ஆற்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளா் பிரிவின் 244- ஆம் ஆண்டு விழா வரும் 20-ஆம் தேதி முதல் 24... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நவ. 21-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம், தொழில்முனைவோா் கருத்தரங்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

ஆற்காடு: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைசோ்ந்த ஜேம்ஸ் (42). இவா் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கலவை போலீஸாா் கைது செய்யப்... மேலும் பார்க்க

பெல் தொழிலகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி

ராணிப்பேட்டையில் நடைபெற்ற அகில இந்திய பெல் தொழிலகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் போபால் அணி வெற்றி பெற்றது. அகில இந்திய பெல் நிறுவன தொழிலகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி ராணிப்பேட்டை டாக்ட... மேலும் பார்க்க