குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
ஆற்காடு: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைசோ்ந்த ஜேம்ஸ் (42). இவா் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கலவை போலீஸாா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அவரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா ஒராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். உத்தரவின் நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள ஜேம்ஸிடம் வழங்கப்பட்டுள்ளது.