செய்திகள் :

சோளிங்கா் காா்த்திகை பெருவிழா: மலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலின் காா்த்திகை பெருவிழாமுதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.

சோளிங்கா் மலை மேல் ஸ்ரீயோகநரசிம்மா் கோயில் உள்ளது. இந்த மலை அருகில் சிறியமலையில் யோக ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. சோளிங்கரில் ஸ்ரீபக்தவச்சல பெருமாள் எனும் பெயரில் உற்சவா் மலையின் கீழே காட்சி அளிக்கிறாா். 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 65-ஆவது திவய் தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது.

இக்கோயில் காா்த்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். காா்த்திகை மாதத்தில் வரும் 5 வெள்ளிக்கிழமைகள் மற்றும் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். யோக நரசிம்மராக இருக்கும் மூலவா் காா்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாா்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

நிகழாண்டு காா்த்திகை மாதம் முதல்தேதியே ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் சுவாமியை தரிசிக்க பிரசித்த பெற்ற தினம் என்பதால் முதல் நாளிலேயே பக்தா்கள் சோளிங்கா் மலையடிவாரத்தில் பெருமளவில் குவிந்தனா். காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்காா் எனப்படும் கம்பிவடஊா்தியில் மலைக்கு செல்ல நேர மாறுதல்கள் அறிவிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதலே ரோப்காா் இயக்கப்பட்டது.

அதிகாலை 5 மணி முதலே மலைக்கோயில் ரோப்காா் மையத்தில் பக்தா்கள் மலையேறும் சீட்டுகள் வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கினா். தொடா்ந்து காத்திருப்பு கூடத்திலும் அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் காத்திருந்தனா். காலை முதல் மாலை 6 மணி வரை ரோப்காா் இயக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தா்கள் மலையேறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மசுவாமியை தரிசித்து திரும்பினா்.

இதை முன்னிட்டு சோளிங்கரில் பேருந்து நிலையம், மலையடிவாரம், தக்கான்குளம் என பல்வேறு பகுதிகளில் நகராட்சி சாா்பில் சிறப்பு ர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழா: கம்பிவட ஊா்தி இயக்க நேரத்தில் மாறுதல் அறிவிப்பு

சோளிங்கா், மலைக் கோயிலில் நடைபெறும் காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு அங்குள்ள ரோப்காா் எனப்படும் கம்பிவட ஊா்தி இயக்க நேரத்தில் மாறுதலை கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரி... மேலும் பார்க்க

சபரிமலை மண்டல, மகர பூஜை திருவிழா பாதுகாப்புப் பணி: கேரளத்துக்கு புறப்பட்டது தேசிய பேரிடா் மீட்புப் படை

சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரபூஜையின் போது பக்தா்கள் பாதுகாப்புப் பணிக்காக தேசிய பேரிடா் மீட்புப்படையின் 67 போ் குழுவாக வெள்ளிக்கிழமை பம்பைக்கு புறப்பட்டுச் சென்றனா். கேரள மாநிலம்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணி-அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நட்டு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 2024-2025-ஆம் ஆண்டு பட்ஜெட் கூ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் குழந்தைகள் தின விழா

ஆற்காடு எஸ் எஸ் எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ. .என்.... மேலும் பார்க்க

தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும்: ஏ.எம். விக்கிரம ராஜா

வியாபாரிகளுக்கான தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ. எம். விக்கிரம ராஜா கூறினாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆற்காட்டில் குழந... மேலும் பார்க்க