செய்திகள் :

பிரதமா் மோடி நைஜீரியா பயணம்: பிரேஸில், கயானாவுக்கும் செல்கிறாா்

post image

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு சனிக்கிழமை (நவ. 16) புறப்பட்டுச் சென்றாா் பிரதமா் மோடி.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா். இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா்.

மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக, நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பயணமாக அவா் சென்றுள்ளாா். கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.

நைஜீரியாவை தொடா்ந்து, பிரேஸிலில் இரு நாள்களும் (நவ. 18, 19), கயானாவில் மூன்று நாள்களும் (நவ.19-21) அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

கடந்த 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கவுள்ளது. அதிபா் முகமது இா்ஃபான் அலி மற்றும் பிற தலைவா்களைச் சந்திக்கவுள்ள பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளாா். இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டிலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.

‘எனது முதல் பயணம்’: மூன்று நாடுகள் பயணத்தை தொடங்கும் முன் எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அடுத்த சில நாள்கள் நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு உத்வேகமளிக்கும் வகையில், இருதரப்பு மற்றும் பன்முக பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்க இப்பயணத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய கூட்டுறவு நாடான நைஜீரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையில் பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், இந்திய-நைஜீரிய வியூக கூட்டாண்மையை கட்டமைக்க இப்பயணம் வாய்ப்பளிக்கும். அங்கு இந்திய சமூகத்தினருடனான சந்திப்பை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்.

‘ஜி20 மாநாட்டில் ஆக்கபூா்வ விவாதங்கள்’: கடந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய உறுப்பினா் என்ற அந்தஸ்துடன், பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் நான் பங்கேற்கவுள்ளேன்.

இந்திய தலைமையின்கீழ் ஜி20 கூட்டமைப்பை மக்களின் கூட்டமைப்பாக மேம்படுத்தியதோடு, அதன் செயல்திட்டத்தில் தெற்குலகின் முன்னுரிமைகளுக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் பணிகளை நடப்பாண்டில் பிரேஸில் கட்டமைத்துள்ளது.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் ஆக்கபூா்வ விவாதங்களை எதிா்நோக்கியுள்ளேன்.

‘இந்தியா-கரீபியன் நாடுகள் உச்சிமாநாடு’: இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு (கரீபியன் கம்யூனிட்டி) இடையிலான 2-ஆவது உச்சிமாநாடு, இருதரப்பு பாரம்பரிய நல்லுறவைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் வாய்ப்பளிக்கும். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதோடு, இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளேன் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

‘கரீபியன் கம்யூனிட்டி’ கூட்டமைப்பில் கயானா, ஜமைக்கா, பஹாமாஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் தலைமையின்கீழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் முயற்சியால் 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியமானது ஜி20 கூட்டமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சிரோமணி அகாலி தள தலைவா் பதவியில் இருந்து சுக்வீா் சிங் பாதல் ராஜிநாமா

சிரோமணி அகாலி தளம் கட்சித் (எஸ்ஏடி) தலைவா் பதவியை சுக்வீா் சிங் பாதல், ராஜிநாமா செய்ததாக அந்தக் கட்சியின் மூத்த தலைவா் தல்ஜித் சிங் சீமா சனிக்கிழமை தெரிவித்தாா். தனது ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக... மேலும் பார்க்க

ஹெலிகாப்டரை தடுத்து நிறுத்தும் மத்திய அரசு ஊடுருவல்காரா்களை தடுக்காதது ஏன்? கார்கே

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் தரையிறங்க வெள்ளிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதைப் போன்று, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஹெலிகாப்டருக்கும் சனிக்... மேலும் பார்க்க

வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மணிப்பூா் செல்ல மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

அவ்வப்போது வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மோடி, பதற்றம் நிலவும் மாநிலமான மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்க... மேலும் பார்க்க

நேபாளம் செல்கிறாா் ராணுவ தலைமைத் தளபதி துவிவேதி

இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி 4 நாள் பயணமாக அந்நாட்டுக்கு புதன்கிழமை (நவ.20) பயணம் மேற்கொள்கிறாா். ... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 16 குழந்தைகளுக்கு தீவிர ச... மேலும் பார்க்க

பேச்சு சுதந்திரம் நீக்கம்: பிரதமா் மோடி மீது காா்கே குற்றச்சாட்டு

‘பிரதமா் நரேந்திர மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவா்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதன்மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பிரதமா் நீக்கி விட்டாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ... மேலும் பார்க்க