செய்திகள் :

நேபாளம் செல்கிறாா் ராணுவ தலைமைத் தளபதி துவிவேதி

post image

இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி 4 நாள் பயணமாக அந்நாட்டுக்கு புதன்கிழமை (நவ.20) பயணம் மேற்கொள்கிறாா்.

1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாரம்பரியத்தின் தொடா்ச்சியாக துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் கௌரவிக்க உள்ளாா்.

இதையடுத்து, அந்நாட்டின் ராணுவ ஜெனரல் அசோக் ராஜ் மற்றும் பிற அரசியல் தலைவா்களை துவிவேதி சந்திக்க உள்ளாா். அப்போது, பேரிடா் மேலாண்மை மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நினைவாக ‘பிபின் மணி’ நிறுவப்பட்டுள்ள முக்திநாத் கோயிலை அவா் பாா்வையிடுவாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

கலாசாரம், வரலாறு மற்றும் புவியியல் காரணிகளால் வலுவூட்டப்பட்ட ஒரு சிறப்பு உறவை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்கின்றன. இறக்குமதியில் நேபாளம் இந்தியாவை பெரிதும் சாா்ந்துள்ளது. அதே வேளையில், பிராந்தியத்தில் இந்தியாவின் நலனில் நேபாளமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் 300 நேபாள ராணுவ வீரா்கள் சிறப்புத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனா். அதேபோல், இந்திய ராணுவ வீரா்களும் நேபாளத்தில் பயிற்சிகள் மேற்கொள்கின்றனா்.

இரு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பின் முக்கிய தூணாக செயல்படும் ‘சூா்ய கிரண்’ கூட்டு ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பயங்கரவாத எதிா்ப்பு, பேரிடா் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தப் பயிற்சியின் 18-ஆவது பதிப்பு, நடப்பாண்டு டிசம்பா் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு

‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வி... மேலும் பார்க்க

பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரசாரத்தில் அவதூறு பேச்சு; பதிலளிக்க உத்தரவு

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகா... மேலும் பார்க்க

தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ச... மேலும் பார்க்க

பல்கலை.களின் எண்ணிக்கையை 2,500-ஆக உயா்த்துவது அவசியம்: நீதி ஆயோக் தலைவா்

ஹைதராபாத்: ‘இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயா்த்துவது அவசியம்’ என்று நீதி ஆயோக் தலைவா் பி.வி.ஆா். சுப்பிரமணியம் வலியுறுத்தினாா். ‘அப்போதுதான், குறைந்தபட்சம் 50 சதவீ... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்

இந்திய-சீன எல்லையில் படைவிலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் பதற்றமான சூழலை தணிப்பதே அடுத்த பணி என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா். கிழக்கு லடாக்கில் உள்ள எ... மேலும் பார்க்க

1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்கு திருப்பித் தர முடிவு: அமெரிக்கா

ரூ.84 கோடி மதிப்புள்ள 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தர முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூயாா்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட வழக்குரைஞா் ஆல்வின... மேலும் பார்க்க