நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album
தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்ற சில நாள்களில் இதுகுறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் இனி புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் புதிய மனுக்கள், பிணை மனுக்கள் மட்டுமே விசாரணைக்காக பட்டியலிடப்படும். தொடா் விசாரணை வழக்குகளின் விசாரணை இந்த இரு நாள்களில் நடைபெறாது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான 3 நாள்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் உணவு இடைவேளைக்குப் பிந்தைய பிற்பகல் அமா்வில் பதிவாளா் அலுவலத்தின் அனுமதியுடன் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, புதிய வழக்குகளின் விசாரணைகள் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பட்டியிலிடப்பட்டன. செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் தொடா் விசாரணை வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வந்தன.