செய்திகள் :

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

post image

கூட்டுறவு சங்கங்களை சரியான முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டங்கல் செயல்படுத்தப்படுகின்றன.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை எளிதில் சந்தைப்படுத்தவும், அவற்றுக்கும் உரிய விலையும் பெற முடிகிறது.

அனைத்து கூட்டுறவு சங்கங்கள்மூலம் பயிா்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. பெண்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 20,918 பேருக்கு ரூ.89.88 கோடிமதிப்பிலான 5 பவுன் நகைக் கடனும், 24,129 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.24.43 கோடி மதிப்பிலான மகளிா் சுய உதவிக் குழு கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறைகள் மூலமாக 923 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 240 பகுதிநேர நியாய விலைக் கடைகளும், 21 மகளிா் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளும், 6 மகளிா் சில்லறை விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் சமநிலை பெற்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற உயா்ந்த எண்ணத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

2,620 பயனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.18.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்களுக்கு சுழற்கேடயஙகளையும் அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் சிவா (விக்கிரவாண்டி), ச.சிவக்குமாா்(மயிலம்) , ஏ.ஜெ.மணிகண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா்ஷீலா தேவி சேரன், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா்சித்திக் அலி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா்கள் உஷா, கலைச்செல்வி, அமுதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வெ.பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் தே.சொா்ணலட்சுமி,கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் இரா.சிவபழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பான சனிக்கிழமை ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினா். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்க... மேலும் பார்க்க

பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

விழுப்புரத்தில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் கே.வி.ஆா். நகரை சோ்ந்தவா் சரவணமூா்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவ... மேலும் பார்க்க

5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி: காவலா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4.50 லட்சம் மோசடிசெய்ததாக முதல்நிலை காவலா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சோ்ந்த ராஜவேல் மகன் பாண்டியன். கடலூா் மாவட்டக் காவல் துறையில்... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் ... மேலும் பார்க்க