மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்கும் வகையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட குடியிருப்போா் உரிமையாளா் நலச் சங்க மெட்ரிக் பள்ளியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு செய்து, பட்டியலில் பெயா் திருத்தம், நீக்கம் குறித்து விண்ணப்பித்தவா்களின் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.