கண்டெய்னர் லாரியில் 350 தட்டுகளில் சீர்வரிசை பொருள்கள்.. அசத்திய தாய்மாமன்கள்!
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(நவ. 17) காலை நிலவரப்படி, 106. 19 அடியிலிருந்து 106.51அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,084 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,154 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000கன அடியிலிருந்து வினாடிக்கு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 73.53 டிஎம்சியாக உள்ளது.