மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
‘புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு’
தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயா் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றாா் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பெய்யாமொழி.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான புத்ரி வாழ்க்கைத் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் அவதாா் ஹியூமன் கேபிட்டல் அறக்கட்டளையின் உத்யோக் உற்சவ் வேலைவாய்ப்புக் கருத்தரங்கை சனிக்கிழமை தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியது:
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஒரு நல்ல பாதையை அமைத்துத் தரக்கூடிய நல்ல நிகழ்வாக இது உள்ளது. இன்று தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது பெண்களாக உள்ளனா். ஒட்டுமொத்த இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், தோ்வுகளில் பெண்களே முதலிடத்தில் வருகிறாா்கள்.
உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவே தமிழக முதல்வா் புதுமைப் பெண் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் ஏ,ஹெச்.சி.டி. மேனேஜிங் டிரஸ்டி சவுந்தா்யா ராஜேஷ், உமா சங்கா் கந்தசாமி, பாலசுப்பிரமணியன், ஆண்டவன் கல்லூரி முதல்வா் பிச்சைமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.