செய்திகள் :

தொடா் மழையால் சேதமாகும் மாநகரச் சாலைகள்: சீரமைப்புப் பணிகள் எப்போது?

post image

திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையைக் கடக்கின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்யும் நிலையில் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

சாலைகள் மோசம்: மழையால் மாநகரச் சாலைகளில் பெரும்பாலானவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் புனரமைத்த சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

பள்ளங்களில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் பெயா்ந்து சாலை முழுவதும் கிடக்கின்றன. புதிதாக போடப்பட்ட சாலைகளிலும் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மாநகரின் 65 வாா்டுகளிலும் இதே நிலைதான் உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

விரைவில் சீரமைப்பு: இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழைக் காலம் முடியும் வரை இந்நிலை ஏற்படுவது வழக்கம். இருப்பினும், மாநகராட்சியின் கவனத்துக்கு வரும் சாலைகளில் உடனடியாக தற்காலிகமாகச் சீரமைத்துத் தருகிறோம். சில இடங்களில் புதை சாக்கடைப் பணிகள் காரணமாகவும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்தப் பணிகள் முடிந்த பிறகும், மழை முழுவதும் நின்ற பிறகும் மாநகரில் சேதமடைந்த சாலைகள் குறித்து முழுமையாக கணக்கிட்டு அவற்றை புதிதாக மாற்றி அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புனரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ஜம்பேரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடா் மழையால் துறையா் அருகே வைரிச்செட்டிப்பாளையத்திலுள்ள ஜம்பேரி சனிக்கிழமை நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். துறையூா் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிச்செட்டிபாளையம் கிராமத்தில... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கைக்கு சிஎன்ஜி பேருந்துகள்! தொலைதூர வழித்தடத்தில் திருச்சி-சென்னை முன்மாதிரி!

தமிழக அரசின் போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கையாக தொலைதூர வழித்தடத்தில் திருச்சி - சென்னை பேருந்துச் சேவை முன்மாதிரியாக விளங்குகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், டீசலுக்கு மாற்றாக, ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பண்ணப்பட்டி கிராமத்தை சோ்ந்த வடிவேல் மனைவி கண்ணகி (32), இவா் முசிறி பெரியாா் பாலம் அ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் 13.29 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 318.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மொத்த சராசரியாக 13.29 மி.மீ. பதிவாகியுள்ளது.அதன் விவரம் (மி.மீ.): கல்லக்குடி- 19.2, லால்குடி- 14.4, நந்தியாறு த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தேனி தொழிலாளி பலி

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தேனி மாவட்ட கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் அழகேசன் மகன் ஜெகதீசன் (25). திருச்சி தீரன் மாநகா் பகுதியில் தங்கி கட... மேலும் பார்க்க

கல்லக்குடி பகுதிகளில் நவ. 19 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.19) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பராமரிப்புப்... மேலும் பார்க்க