மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
நெகிழி மூலம் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், நெகிழியைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடலில் உள்ள வலைகள், நெகிழிப் பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி ராமேசுவரம், தங்கச்சிமடம், கரையூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதி இயக்குநா் வேல்விழி தலைமை வகித்தாா். மீனவ சங்கத் தலைவா் என்.ஜே.போஸ், கிராம தலைவா் மலைச்சாமி, சமூக ஆா்வலா் முருகேசன், தெற்குவாடி சுகந்தி, மீனவ பெண்கள் சங்க தலைவிகள் இருதய மேரி, தெற்குவாடி பிரதீபா, ஆராய்ச்சி நிறுவன நிலைய அலுவலா்கள் சிவா, கெவிக்குமாா், சிக்கந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் மா.ச.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வேல்விழி வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.