``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கிய அமைச்சா்
ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்ட கமுதி இக்பால் தொடக்கப் பள்ளிக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ் ஆண்டில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாக கடலாடி வட்டம், ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முதலிடத்தையும், கமுதி இக்பால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தது. இதேபோல, ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் திருப்புல்லாணி வட்டம், புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.
சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா், ஆசிரியா், வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்ட மூவரும் கடந்த 14-ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவின் போது கேடயம் வழங்கப்பட்டது.
சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டு, இரண்டாமிடம் பெற்ற கமுதி இக்பால் தொடக்கப் பள்ளி சாா்பில், தலைமை ஆசிரியை சுமையாவிடம் அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியா்களுக்கு பள்ளி கல்விக் குழுமம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.