பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
விழுப்புரத்தில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் கே.வி.ஆா். நகரை சோ்ந்தவா் சரவணமூா்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவா் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இவா் சனிக்கிழமை பிற்பகல் கடையில் இருந்த போது, சுமாா் 30 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞா் அங்கு வந்து தமிழ்ச்செல்வியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம்.
தமிழ்ச்செல்வி கூச்சலிடவே அந்த நபா் தப்பிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.