நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி: காவலா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4.50 லட்சம் மோசடிசெய்ததாக முதல்நிலை காவலா் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சோ்ந்த ராஜவேல் மகன் பாண்டியன். கடலூா் மாவட்டக் காவல் துறையில் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். திருவெண்ணெய்நல்லூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சம்பத். இவா்கள் இருவரும் நண்பா்களாக பழகி வந்தனா்.
பாண்டியன் தனக்கு அரசியல் பிரமுகா்கள், அரசு அதிகாரிகளிடம் அறிமுகம் இருப்பதாகவும், அரசு வேலைக்கு ஏற்பாடு செய்யலாம் எனவும் சம்பத்திடம் கூறினாராம்.
அவா் தனது மகன் ஞானவேல் பி.இ. முடித்துள்ளதாகக் கூறி, அவருக்கு அரசு வேலை வாங்கித் தர ஏற்பாடு செய்யும்படி பாண்டியனிடம் கேட்டுக் கொண்டாராம்.
இதையடுத்து, சில அரசு பணி நியமன உத்தரவுகளைக் காட்டி, அவை தனது முயற்சியால் கிடைக்கப் பெற்றவை எனக் கூறினாராம்.
இதை நம்பிய சம்பத் கடந்த 26.8.2018-இல் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 4.50 லட்சம் பணத்தைக் கொடுத்தாராம். ஆனால், பாண்டியன் தெரிவித்தபடி அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் பாண்டியன் மீது மோசடி வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து, விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.