செய்திகள் :

பல்கலை.களின் எண்ணிக்கையை 2,500-ஆக உயா்த்துவது அவசியம்: நீதி ஆயோக் தலைவா்

post image

ஹைதராபாத்: ‘இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயா்த்துவது அவசியம்’ என்று நீதி ஆயோக் தலைவா் பி.வி.ஆா். சுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.

‘அப்போதுதான், குறைந்தபட்சம் 50 சதவீத மாணவா்களுக்கு கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் இந்திய வா்த்தக கல்வி நிறுவன (ஐஎஸ்பி) நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 4 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால், இந்த எண்ணிக்கை என்பது, கல்லூரி சோ்க்கை பெறுவதற்கான வயதுடைய இளைஞா்கள் எண்ணிக்கையில் 29 சதவீதம் மட்டுமே. குறைந்தபட்சம், 50 சதவீத மாணவ, மாணவிகளை கல்லூரியில் சோ்க்கை பெற வாய்ப்பளிப்பது அவசியம். இதற்கு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500 என்ற அளவுக்கு உயா்த்துவது மிக அவசியம்.

எண்ம பொது உள்கட்டமைப்பை இந்தியா பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது. மக்களுக்கான எண்ம அடையாளத்தை அறிமுகப்படுத்தியதில் 20 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட எஸ்டோனியா முதல் நாடு என்றபோதும், 140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா அனைவருக்கும் எண்ம அடையாளத்தை அளித்து எண்மத் தொழில்நுட்ப பயன்பாட்டின் முன்னணி நாடாக திகழ்கிறது. 120 கோடி மக்கள் வங்கிக் கணக்கைப் பெற்றுள்ளனா். அந்த வகையில், எண்மத் தொழில்நுட்ப ஆய்வகமாக இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவை தவிர வேறு எங்கும் செய்துபாா்க்க முடியாத அளவிலான எண்மத் தொழில்நுட்ப ஆய்வுகளை செய்துபாா்க்கக்கூடிய ஆய்வகமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பான எண்ம பணப் பரிவா்த்தனைக்கான இடமாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் நடைபெறும் பணப் பரிவா்த்தனைகளில் 48 முதல் 50 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. மாதத்துக்கு சுமாா் 1,000 கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

வரும் 2047-ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார நிலையை விஞ்சி, 30 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நவீன வளா்ந்த பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிபப்து முக்கியமானது என்றாா் அவா்.

மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.கொலை செய்யப்பட்டவா... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு ... மேலும் பார்க்க

சபரிமலையில் பக்தா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவ சேவை

மண்டல மகரவிளக்கு மகோற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாட்ஸ் ஆப் மூலம் 125 மருத்துவ குழுக்கள் பக்தா்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கின. ‘வாட்ஸ்ஆப்’ மூலம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு

‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வி... மேலும் பார்க்க

பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரசாரத்தில் அவதூறு பேச்சு; பதிலளிக்க உத்தரவு

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகா... மேலும் பார்க்க

தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ச... மேலும் பார்க்க