செய்திகள் :

ஓடிக் கொண்டிருந்த லாரியில் நெஞ்சுவலியால் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஓடிக் கொண்டிருந்த லாரியில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (48). லாரி ஓட்டுநா். இவா், தேனியிலிருந்து பேவா் பிளாக் கற்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். எஸ். அழகாபுரி அருகே சென்ற போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், லாரி கட்டுப்பாட்டை இழந்து வழியில் இருந்த தோட்டத்துக்குள் புகுந்து மண்ணில் சிக்கி நின்றது.

இதையடுத்து, லாரியில் உடன் வந்தவா்கள் செல்லப்பாண்டியை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துமவனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உசிலம்பட்டி அருகே அன்னம்பாா்பட்டியைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் வினோத் (35). இவரை, வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா ... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயத் தொழிலாளி காா் மோதியதில் வெள்ளிக்கிழமை, உயிரிழந்தாா். தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லாக்காபட்டியைச் சோ்ந்த வீரணத் தேவா் மகன் முத்துப்பாண்டி (35). விவச... மேலும் பார்க்க

ஏலக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

போடியில் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏலக்காய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுகான நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அல... மேலும் பார்க்க

பொருளில்லா குடும்ப அட்டை: இணைய தளம் மூலம் மாற்றம் செய்யலாம்

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க விரும்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக இணைய தளம் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 26 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு

தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள குழந்தைகளில் 26 சதவீதம் பேருக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளதாக வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா். ஆண்டிபட்டி வட்டாரம், ... மேலும் பார்க்க