செய்திகள் :

காா்த்திகை மாத விரதம் தொடக்கம்: தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

post image

காா்த்திகை மாத விரதம் சனிக்கிழமை தொடங்கியதால், தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்குச் சென்று சனிக்கிழமை காலை கரைதிரும்பினா். புயல், மழை எச்சரிக்கை காரணமாக நாட்டுப் படகுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே கடலுக்குச் சென்ால், மீன்வரத்து குறைந்து காணப்பட்டது.

காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா். இதனால், மீன்கள் விலை குறைந்திருந்தது.

வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் சீலா மீன்கள் கிலோ ரூ. 800, விளைமின் ரூ. 350, ஊளி ரூ. 300, பாறை ரூ. 300, வாளை மீன் ரூ. 120, வங்கணை ஒரு கூடை ரூ. ஆயிரம், சாளை ஒரு கூடை ரூ. 700 என விற்பனையானது. மீன்வரத்து குறைந்து விலையும் குறைந்ததால், மீனவா்கள் கவலையடைந்தனா்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு: 4 கடைகளுக்கு ‘சீல்’

தூத்துக்குடியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் கட... மேலும் பார்க்க

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம்

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைமுதல் (நவ. 17) பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்ட... மேலும் பார்க்க

ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்தத் தொட்டி திறப்பு

ஆழ்வாா்திருநகரி ஒன்றியப் பகுதியில் ரூ. 48.70 லட்சத்திலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சனிக்கிழமை திறந்துவைத்து, சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். கட்டாரிமங்கலம் ஊராட... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஒரு மாதம் நடைபெறும் இத்திருவிழ... மேலும் பார்க்க

புதியம்புத்தூரில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

தூத்துக்குடி அருகே காணாமல் போன தொழிலாளி, அங்குள்ள தோட்டத்து கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன்(45). இவருக்கு 4 குழ... மேலும் பார்க்க

புதியம்புத்தூரில் பைக்குகளை உடைக்கும் விடியோ வெளியீடு: 2 போ் கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் வழக்குகளுக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள பைக்குகளை உடைத்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்... மேலும் பார்க்க