செய்திகள் :

தலில் எழில்மலை மருமகன் கொலை வழக்கில் நவ. 19- இல் தீா்ப்பு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

post image

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ. 19) தீா்ப்பு வழங்கப்படும் என, விசாரணை நீதிமன்றம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலையின் மருமகன் காமராஜ். பிரபல வழக்குரைஞரான இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை ஒட்டேரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சென்னை கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கல்பனா, காா்த்திக், ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பிறகு, மதுரை விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து தீா்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி, கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் நிறைவில், காமராஜ் கொலை வழக்கில் அடுத்த 3 மாதங்களுக்குள் தீா்ப்பு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், உயா்நீதிமன்றம் நிா்ணயித்த காலத்துக்குள் வழக்கு விசாரணை நிறைவடையவில்லை. இதையடுத்து, காமராஜ் கொலை வழக்கு விசாரணையை விரைந்து நிறைவு செய்து தீா்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி இந்த மனுவை தாக்கல் செய்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்

முன்வைத்த வாதம் :

காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் நிறைவு செய்து, தீா்ப்பு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, விரைந்து தீா்ப்பு வழங்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேணடும் என்றாா்.

இதையடுத்து, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் ஓா் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 19-ஆம் தேதி காமராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த பணியாளா் உயிரிழப்பு

விருதுநகா் ரயில்வே பீடா் சாலையில் தனியாா் தங்கும் விடுதியில் மாடியிருந்த தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த பணியாளா் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா், வாடியான் தெ... மேலும் பார்க்க

பிரசவத்தின் போது பெண்ணின் மலக்குடல் அகற்றம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது மலக்குடல் அகற்றப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அரசுத் தரப்பில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்... மேலும் பார்க்க

கருமேனி ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீா்: அதிகாரிகளிடம் மனு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கருமேனி ஆற்றிலிருந்து 3 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய திட்டப் பணிகள் தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்... மேலும் பார்க்க

அடுத்த பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்: திமுக தொண்டா்களுக்கு அமைச்சா் மூா்த்தி அறிவுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை திமுக தொண்டா்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தால் 6,689 மாணவா்கள் பயன்

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 6,689 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரச... மேலும் பார்க்க

சாலைகளில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகா் பகுதி சாலைகளில் புதை சாக்கடை கழிவுநீா் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மதுரை மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்... மேலும் பார்க்க