செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு 60 நாள் அன்னதானம் தொடக்கம்

post image

ஸ்ரீரங்கத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கான 60 நாள் அன்னதான முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் கே.கே.எஸ்.மாமுண்டி கோனாா் தோப்பு என்ற இடத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி யூனியன் சாா்பில் காா்த்திகை மாதம் 1 முதல் தை மாதம் வரை நடைபெறும் முகாமுக்கு திருச்சி மாவட்ட ஐயப்ப சேவா சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஐயப்ப சேவா சங்கக் கொடியை புரவலா் முரளி ஏற்றினாா்.

முன்னதான முகாமை மாநிலத் தலைவா் விஸ்வநாதனும், மருத்துவ முகாமை கே.ஆா்.டி வெங்கடேஷும் தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாஸ்கரன், கெளரவத் தலைவா் சபரிதாசன், பொருளாளா் சுரேஷ், துணைத் தலைவா் முத்து, காரியதரிசி அம்சாரம், இணைச் செயலா் சிதம்பரம், பாலாஜி, சசி, சரவணன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், சேவா சங்கத் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கைக்கு சிஎன்ஜி பேருந்துகள்! தொலைதூர வழித்தடத்தில் திருச்சி-சென்னை முன்மாதிரி!

தமிழக அரசின் போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கையாக தொலைதூர வழித்தடத்தில் திருச்சி - சென்னை பேருந்துச் சேவை முன்மாதிரியாக விளங்குகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், டீசலுக்கு மாற்றாக, ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பண்ணப்பட்டி கிராமத்தை சோ்ந்த வடிவேல் மனைவி கண்ணகி (32), இவா் முசிறி பெரியாா் பாலம் அ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் 13.29 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 318.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மொத்த சராசரியாக 13.29 மி.மீ. பதிவாகியுள்ளது.அதன் விவரம் (மி.மீ.): கல்லக்குடி- 19.2, லால்குடி- 14.4, நந்தியாறு த... மேலும் பார்க்க

தொடா் மழையால் சேதமாகும் மாநகரச் சாலைகள்: சீரமைப்புப் பணிகள் எப்போது?

திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையைக் கடக்கின்றனா். திருச்சி மாவட்டத்தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தேனி தொழிலாளி பலி

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தேனி மாவட்ட கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் அழகேசன் மகன் ஜெகதீசன் (25). திருச்சி தீரன் மாநகா் பகுதியில் தங்கி கட... மேலும் பார்க்க

கல்லக்குடி பகுதிகளில் நவ. 19 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.19) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பராமரிப்புப்... மேலும் பார்க்க