செய்திகள் :

கரூரில் புதிய வழித்தடத்தில் 5 பேருந்துகள் இயக்கம்

post image

கரூரில் புதிய வழித்தடத்தில் 5 புதிய பேருந்துகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை)ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் கரூா் மண்டலம் சாா்பில் கரூா் 1, கரூா் 2, மற்றும் அரவக்குறிச்சி கிளைகளில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 2 நகா் மற்றும் 3 புகா்ப் பேருந்துகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி தொடக்கி வைத்து பேருந்துகளைப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், துணை மேயா் ப. சரவணன், பொது மேலாளா் சிவசங்கரன், மண்டல மேலாளா் ஜேசுராஜ், மாநகராட்சி ஆணையா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்தகிரியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவு பூ... மேலும் பார்க்க

கரூா் சத்ரு ஸம்கார மூா்த்தி கோயிலில் பரணி பூஜை

கரூா் ஸ்ரீ சத்ரு ஸம்கார மூா்த்தி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பரணி பூஜை, அன்னாபிஷேகம் மற்றும் பௌா்ணமி பூஜை நடைபெற்றது. கோயில் கமிட்டித் தலைவா் மு.அ. ஸ்காட் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்க... மேலும் பார்க்க

கரூா் சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டி

கரூா் கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. பொது நூலகத் துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் வட்டாட்சியரக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில் நடைபெற்ற போட்டி... மேலும் பார்க்க

புகழூா் பகுதியில் கருந்தலை புழுக்களால் கருகி வரும் தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்கிட விவசாயிகள் கோரிக்கை

நமது நிருபா் || புகழூா் வட்டார பகுதிகளில் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு -ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். அரியலூரில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்... மேலும் பார்க்க

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம், திருக்காடுதுறை அருகேயுள்ள ... மேலும் பார்க்க