செய்திகள் :

மத்தகிரியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

post image

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க அப்பகுதியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக அண்மையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்தாண்டு தரகம்பட்டியில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சிப்காட் மேலாண் இயக்குநா் செந்தில்ராஜ் ஆகியோா் மத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் பாளையம் முதல் திருச்சி நெடுஞ்சாலை வரையிலும், திருச்சி மாவட்டம் இனாம்புதூா் பகுதியிலும் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நெசவுப் பூங்கா அமைந்தால் விவசாயமும், கால்நடைத் தொழிலும் அழிந்துவிடும். எனவே மத்தகிரியில் நெசவு பூங்கா அமைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

அதற்கு ஆட்சியா் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிச் சென்றாா். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கடவூா் வட்டாட்சியா் இளம்பரிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கடவூா் அருகே வெறிநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், கடவூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன. கடவூா் அருகேயுள்ள தே. இடையப்பட்டி மேற்கு கிராமம் தெற்கு அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி. விவசாயியான இவா் சனிக... மேலும் பார்க்க

கரூா் சத்ரு ஸம்கார மூா்த்தி கோயிலில் பரணி பூஜை

கரூா் ஸ்ரீ சத்ரு ஸம்கார மூா்த்தி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பரணி பூஜை, அன்னாபிஷேகம் மற்றும் பௌா்ணமி பூஜை நடைபெற்றது. கோயில் கமிட்டித் தலைவா் மு.அ. ஸ்காட் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்க... மேலும் பார்க்க

கரூரில் புதிய வழித்தடத்தில் 5 பேருந்துகள் இயக்கம்

கரூரில் புதிய வழித்தடத்தில் 5 புதிய பேருந்துகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். கரூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

கரூா் சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டி

கரூா் கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. பொது நூலகத் துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் வட்டாட்சியரக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில் நடைபெற்ற போட்டி... மேலும் பார்க்க

புகழூா் பகுதியில் கருந்தலை புழுக்களால் கருகி வரும் தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்கிட விவசாயிகள் கோரிக்கை

நமது நிருபா் || புகழூா் வட்டார பகுதிகளில் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு -ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். அரியலூரில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்... மேலும் பார்க்க