Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண...
கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு -ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் 1,297 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.
அரியலூரில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்‘ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்ததையொட்டி கரூா் வடக்கு காந்தி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கலந்து கொண்டு தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த முடியும். எனவே பாலூட்டும் தாய்மாா்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். கரூா் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,297 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்களின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ.கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் ப.சரவணன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுவாதி, மண்டல குழு தலைவா் கோல்டஸ்பாட் ராஜா, மாமன்ற உறுப்பினா்கள் பா.பூபதி, தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.