செய்திகள் :

``ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..'' - நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

post image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்கள்.

இதுகுறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்ட போது, "எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மனிதம் என்ற அமைப்பின் மூலம் எல்லா வாரமும் ஞாயிற்றுகிழமை ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றனர். கல்லூரியில் படிக்கும் அக்கா, அண்ணன் எல்லாரும் ஒவ்வொரு வாரமும் இதைச் செய்கிறார்கள்.

மதிய உணவு வழங்கிய மாணவர்கள்
மதிய உணவு வழங்கிய மாணவர்கள்

அதை அறிந்ததும், எங்களுக்கும் அப்படி சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது குறித்து, எங்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்ட போது மறுக்காமல் எங்களுக்கு உதவி செய்தனர். குழந்தைகள் தினம் அன்று எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். இன்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மனிதம் அமைப்பின் ஒருங்கிணைப்பால் உடன் சென்று உணவுகளை வழங்கினோம். இதுவரை நாங்கள் கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் இதுவே மறக்க முடியாத மகிழ்ச்சியை கொடுத்து. எங்கள் இந்த எண்ணத்தை நிறைவேற்ற உதவிய எங்கள் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி" என்றனர்.

பள்ளி மாணவர்கள் வழங்கிய உணவை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த செயல் பொது மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

VKT Balan: 'பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' - மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!

மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவால் காலமானார்.டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தன்னுடைய... மேலும் பார்க்க

`கால்பந்து என்றால் அவனுக்கு உயிர்; நிச்சயம் சாதிப்பான்!'- மகன் கனவை நனவாக்கும் மாற்றுத்திறனாளி தந்தை

கடந்த திங்கள் அன்று நடிகர் மம்மூட்டி, விளையாட்டு வீரர் PR ஶ்ரீஜேஷ் உட்பட பலர் பங்குபெற்று பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க விழாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது, மைதானத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்த ஹாஷிம்... மேலும் பார்க்க

`ஓடத்தொடங்கும்போது அம்மாவை நினைச்சுக்குவேன்' - முதலைமைச்சர் கோப்பையில் தங்கம் வென்ற கௌசிகா

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'முதலமைச்சர் கோப்பை 2024'ல் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்துடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை மற்றும் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் 75,000 ரூபாய்க்... மேலும் பார்க்க

`நேற்றுவரை பணி’ - 33 ஆண்டுகளாக நீர்நிலைகள், ஆலயங்களை சீர்படுத்திய நெல்லை முத்துகிருஷ்ணன் காலமானார்

நெல்லை உழவாரப்பணி குழாம் அமைப்பை ஏற்படுத்தி 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த முன்னாள் விமானப்படை வீரான முத்துகிருஷ்ணன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.நெல்லை உழவாரப்பணி குழாம் மூலம் தொடர்ந்தது... மேலும் பார்க்க

ஈரோடு: கல்லறை திருநாளில் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை, மலர் அஞ்சலி.. | Photo Album

கிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ்தவ கல்லறைகிறிஸ... மேலும் பார்க்க