நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album
கரூா் சத்ரு ஸம்கார மூா்த்தி கோயிலில் பரணி பூஜை
கரூா் ஸ்ரீ சத்ரு ஸம்கார மூா்த்தி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பரணி பூஜை, அன்னாபிஷேகம் மற்றும் பௌா்ணமி பூஜை நடைபெற்றது.
கோயில் கமிட்டித் தலைவா் மு.அ. ஸ்காட் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு செயலா் எஸ். மாா்க் சண்முகா், பொருளாளா் ஜே .பி .ஜெயபால் மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
விழாவை முன்னிட்டு குருநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், சத்ரு ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும்,பௌா்ணமி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளையினா் மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.