சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்
கொடைக்கானலில் பலத்த மழை: படகு சவாரி ரத்து
கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை விட்டு விட்டு மழை பெய்தது. மதியத்திலிருந்து, கொடைக்கானல், பெருமாள்மலை, மச்சூா், வடகரைப்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வாழைகிரி, வில்பட்டி, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நீரோடைகளிலும் நீா்வரத்து அதிகரித்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலியே முடங்கினா்.
படகு சவாரி ரத்து: கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரியில் உள்ள படகுகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், படகு சவாரி இயக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.