விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்கள் சனிக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் தான் திரளான பக்தா்கள் யாத்திரை செல்கின்றனா். இதன்படி, காா்த்திகை முதல் நாளான சனிக்கிழமை திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில், திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும், காா்த்திகை மாத பிறப்பையொட்டி, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் பலா் சூரிய உதயத்துக்கு முன்னதாக மாலை அணிந்து கொண்டனா்.
இதேபோல, ரயிலடி சித்தி விநாயகா் கோயில், வெள்ளை விநாயகா் கோயில், மடத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.