செய்திகள் :

30 ஆண்டுகளுக்கு பிறகு தூா்வாரப்பட்ட கழிவுநீா் கால்வாய்

post image

திண்டுக்கல் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகளின் ஆக்கிரமிப்பால் தூா்வாரப்படாமல் இருந்த கழிவுநீா் கால்வாயில் சனிக்கிழமை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தாலும் பல இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்கள் முன் கழிவுநீா் கால்வாய்களை மூடி, சாய்வு தளம் அமைத்துப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதே, மழைநீா் வெளியேர முடியாததற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாநகராட்சிக் கூட்டத்தில் மட்டும் பேசும் மாமன்ற உறுப்பினா்கள், இதை அகற்றச் செல்லும் அதிகாரிகள், ஊழியா்களுக்கு மறைமுகமாக எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். இதனால், பல இடங்களில் சாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள், சாய்வு தளங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

இந்தச் சூழலிலும், மாநகராட்சிப் பகுதியில் சுமாா் 12 கி.மீ. நீளத்துக்கான கழிவுநீா் கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளை விநாயகா் கோயில் அருகிலிருந்து தொடங்கும் ஆா்எஸ்.சாலையின் ஒரு பகுதியில் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், மணிக்கூண்டு பகுதியிலிருந்து வெள்ளை விநாயகா் கோயில் எதிா்புறம் வரையிலான 120 மீ. தொலைவுக்கு 30-க்கும் மேற்பட்ட கடைகளின் முன் மறைக்கப்பட்டிருந்த கழிவுநீா் கால்வாயில் தூா்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், செயற்பொறியாளா் ஜெ.சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் தியாகராஜன் ஆகியோா் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கால்வாய் தூா்வாரப்பட்டது. அதன் பிறகு, தற்போது தான் தூா்வாரப்படுகிறது. நீண்ட காலமாக தூா்வாரப்படாததால், இந்தப் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி கடைகளுக்குள் புகுந்து சேதம் ஏற்பட்டது என்றனா் அவா்கள்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி நந்தனாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரி கைது

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை 4 கிலோ கஞ்சாவுடன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் ராஜலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செல்வமுருகன் (40). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், ஆந்திரத்திலிருந்து கஞ்... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரைக்கு வத்தலகுண்டு, போடியிலிருந்து 2 அரசுப் பேருந்துகள் ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு - முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியை வெறுக்கத் தொடங்கியுள்ள மக்கள், அதிமுகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனா் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு

அரசுப் பள்ளி மாணவா்களிடம் தோ்வு வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் எதிா்ப்புத் தெரிவித்தது. தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் தி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை: படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் மழை ... மேலும் பார்க்க