போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி நந்தனாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (25). இவா் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து பாண்டியராஜனை தாடிக்கொம்பு போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பி.வேல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட பாண்டியராஜனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்தாா். நிகழாண்டில் மட்டும் தற்போது வரை 60 போக்சோ வழக்குகளில் தீா்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.