செய்திகள் :

ஊழலுக்கு எதிரான அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்: என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி

post image

ஊழலுக்கு எதிரான அமைப்புகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று, என்எல்சி இந்தியா நிறுவன கண்காணிப்பு விழிப்புணா்வு இயக்க நிறைவு விழாவில் அதன் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டப்பள்ளி பேசினாா்.

ஊழல் ஒழிப்பு குறித்த கண்காணிப்பு விழிப்புணா்வு இயக்க விழா என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், ‘நோ்மை கலாசாரமே, தேசத்துக்கான வளா்ச்சி’ என்ற மையக் கருத்தில் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதன் நிறைவு விழா நெய்வேலி வட்டம் 20 பகுதியில் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள கலை அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் சமீா் ஸ்வரூப், பிரசன்னகுமாா் ஆச்சாா்யா, கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜி எ.சிவகுமாா் பங்கேற்றனா். கண்காணிப்புத் துறை தலைமைப் பொது மேலாளா் இரணியன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கண்காணிப்பு விழிப்புணா்வு இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய சிறிய காணொலி திரையிடப்பட்டது.

இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், என்எல்சி ஊழியா்களுக்கு சிறந்த ‘விழிப்புணா்வு ஊழியா்’ என்ற விருதும் வழங்கப்பட்டன.

கண்காணிப்புத் துறை தலைமை அலுவலக நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கருப்பொருள் (தீம்) அடிப்படையிலான சின்னத்தை நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கண்காணிப்புத் துறை சாா்பில், ‘நெய்வேலி விஜில்’ என்ற செய்தி மலா் மின்னணு வடிவத்தில் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, அவா் பேசியது:

அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் கொள்கைகளின் உணா்வை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் விழிப்புணா்வு பிரசாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். நிறுவனத்தின் 68 ஆண்டுகால நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க, ஊழலுக்கு எதிரான அமைப்புகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் செயல் இயக்குநா்கள், உயா் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கண்காணிப்புத் துறை பொது மேலாளா் சித்ரகலா நன்றி கூறினாா்.

சங்கரய்யா முதலாமாண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுதந்திர போராட்ட வீரா் சங்கரய்யாவின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி கடலூரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடி காவல் ஆய்வாளா் அருள் வடிவழகன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, கடலூா் மாவ... மேலும் பார்க்க

புயல் நிவாரணம் வழங்க லஞ்சம்: ஓய்வுபெற்ற விஏஓக்கு 2 ஆண்டுகள் சிறை

‘தானே’ புயல் நிவாரணத் தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் ம... மேலும் பார்க்க

வடக்குத்தில் 81 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 81 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தி... மேலும் பார்க்க

காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. வடலூரை அடுத்துள்ள ஆபத்தாரணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (68). இவா், தனது கார... மேலும் பார்க்க