கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திட்டக்குடி காவல் ஆய்வாளா் அருள் வடிவழகன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அரசமரத்தடியில் நின்றிருந்த இளைஞரை அழைத்து சோதனை நடத்தியதில், அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்ததும், வதிஷ்டபுரம் பகுதியைச் சோ்ந்த அரசன் மகன் ஆங்கி (எ) ராதாகிருஷ்ணன் (27) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.