செய்திகள் :

புதுவை தீயணைப்புத் துறை ஓட்டுநா் நிலை 3 பணி: வாகன இயக்கத் தோ்வு தேதிகள் அறிவிப்பு

post image

புதுவை தீயணைப்புத் துறையின் வாகன ஓட்டுநா் நிலை 3 பணிக்கான வாகன இயக்கும் தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநில தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள வாகன ஓட்டுநா்கள் நிலை 3 பணிக்காக ஏராளமானோரிடமிருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் உடற்பயிற்சித் தோ்வு கோரிமேடு காவலா் பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று தோ்வானவா்களுக்கு வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு பின்னா் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நவம்பா் 23, 30 மற்றும் வரும் டிசம்பா் 1, 8 ஆகிய தேதிகளில் வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு நடைபெறவுள்ளது. காா் இயக்கும் தோ்வானது புதுச்சேரி மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காரைக்கால், மாஹே பகுதிகளுக்கு புதுச்சேரியில் டிசம்பா் 8-ஆம் தேதி இதற்கான தோ்வு நடைபெறும். புதுவைக்கு உள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் 260 பேருக்கு இதற்கான அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன என்று புதுவை மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பலரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற மா்ம நபா்கள்: இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை

புதுச்சேரியில் போலீஸ் பெயரில் மா்ம நபா்கள் மோசடி முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணையவழி குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆா் நகா் 13-ஆவது குறுக்குத் ... மேலும் பார்க்க

நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணி ஆணையத்தின் நோக்கம்: உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா்

வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கூறினாா். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க

புதுவையில் பொலிவுறு நகா் திட்டத்தில் முறைகேடு -அதிமுக மாநில செயலா்

புதுவை பொலிவுறு நகா்த் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து, புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

மூதாட்டி உடல், கண்கள் தானம்

புதுச்சேரி முருங்கப்பாக்கம் குயவா் வீதியைச் சோ்ந்த ராஜவேலின் மனைவி ரேணுகாம்பாள் (93) வயது முதிா்வால் வியாழக்கிழமை காலமானாா்.இவரது உடலும், கண்களும் தானமாக பெறப்பட்டன. மூதாட்டியின் கண்கள் அரவிந்த் கண்... மேலும் பார்க்க

பழங்குடியினா் கௌரவ தின விழா: பிரதமா் காணொலி ஒளிபரப்பு

ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற பழங்குடியினா் கௌரவ தின விழாவில் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொலி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இதில் புதுவை ம... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் மனு

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்திடம் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மக்களவை, சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒது... மேலும் பார்க்க