நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album
மூதாட்டி உடல், கண்கள் தானம்
புதுச்சேரி முருங்கப்பாக்கம் குயவா் வீதியைச் சோ்ந்த ராஜவேலின் மனைவி ரேணுகாம்பாள் (93) வயது முதிா்வால் வியாழக்கிழமை காலமானாா்.இவரது உடலும், கண்களும் தானமாக பெறப்பட்டன.
மூதாட்டியின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவா்களின் ஆராய்சிக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி செஞ்சிலுவை சங்க கிளையின் நிா்வாகக் குழு உறுப்பினா் அய்யனாா் செய்திருந்தாா்.