இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் மனு
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்திடம் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மக்களவை, சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில், புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கத்திடம் அவரது அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அப்போது, தங்களது கோரிக்கையை மக்களவைக் கூட்டத் தொடரில் எழுப்புமாறு மாதா் சங்கத்தினா் கேட்டுக்கொண்டனா்.
மனு அளிப்பு நிகழ்வில், இந்திய மாதா் தேசிய சம்மேளன புதுவை மாநிலத் தலைவா் ர.தசரதா, மாநிலச் செயலா் ம.அமுதா, துணைத் தலைவா் பெ.ஆனந்தவள்ளி, துணைச் செயலா்கள் சே.சுமதி, தா.சரோஜா, மாதா் சங்க நிா்வாகிகள் பெ.இந்துமதி, வெ.செல்வி, மாநிலக் குழு உறுப்பினா் ந.நளினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.