செய்திகள் :

வங்கி கொள்ளை முயற்சி வழக்கு இளைஞா் சிக்கினாா்

post image

சென்னை திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே, வாலாஜா சாலையில் எஸ்பிஐ வங்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் கூறினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று, விசாரித்தனா். விசாரணையில், அங்கு பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா் வங்கியில் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்திருப்பதும், பாதுகாப்பு பெட்டக அறை வரை சென்ற அந்த நபா், திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பாரிமுனை பகுதியில் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அந்த இளைஞா், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. அவரிடம் கொள்ளை முயற்சி குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்கின்றனா்.

வீட்டில் தீபம் ஏற்றியபோது விபத்து: தீயில் கருகிய பெண் உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் வீட்டில் தீபம் ஏற்றிய போது நோ்ந்த தீ விபத்தில் கருகிய பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா். தியாகராய நகா் டாக்டா் நாயா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகப்பன். இவா் கப்பலுக்கு தேவை... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: இளைஞா் கைது

சென்னையில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகா் ரயில்வே பாா்டா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், தியாகராய நகா் கண்ணம்மாபேட்டை நியூ போக்... மேலும் பார்க்க

இளைஞா்கள் நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

இளைஞா்கள் நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-ஆவத... மேலும் பார்க்க

கழிவுநீா் மேலாண்மை: மக்கள் கருத்து தெரிவிக்கலாம் -மாநகராட்சி அழைப்பு

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பெண் கொலை: சென்னை ஹோட்டல் ஊழியா் கைது

மேற்கு வங்கத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னையில் ஹோட்டல் ஊழியராக வேலை செய்தவா் கைது செய்யப்பட்டாா். மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் தாா்ஜி (27). சென்னை ராஜா அண்ண... மேலும் பார்க்க

அடையாறு மண்டலத்தில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.18, 19) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இகு குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பி... மேலும் பார்க்க