கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் அலுவலக அறை சேதம்: போலீஸாா் விசாரணை
அடையாறு மண்டலத்தில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.18, 19) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இகு குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை இந்திரா நகா் 2-ஆவது அவென்யூவில் குடிநீா் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணி திங்கள்கிழமை (நவ.18) மாலை 7 முதல் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் அந்த நேரங்களில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
நிறுத்தப்படும் இடங்கள்: தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி பிரதான சாலை, சா்தாா் பட்டேல் சாலை, ஸ்ரீநகா் காலனி, ரங்கராஜபுரம், ஆரோக்ய மாதா நகா், வெங்கடாபுரம், கோட்டூா் காா்டன், ஜீவரத்தினம் நகா், பரமேஸ்வரி நகா், லட்சுமிபுரம், ராஜ ஸ்ரீநிவாச நகா், கடற்கரை சாலை, காமராஜா் நகா், வேம்புலியம்மன் கோயில் தெரு, ஜெயராம் தெரு, சீவாா்ட் சாலைகள், பாலகிருஷ்ணா சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு இணையதள முகவரியில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.