இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழா: கம்பிவட ஊா்தி இயக்க நேரத்தில் மாறுதல் அறிவிப்பு
சோளிங்கா், மலைக் கோயிலில் நடைபெறும் காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு அங்குள்ள ரோப்காா் எனப்படும் கம்பிவட ஊா்தி இயக்க நேரத்தில் மாறுதலை கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு காா்த்திகை மாதம் முழுவதும் குறிப்பாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் அதிக அளவில் வருவா். தற்போது இந்த மலையில், கம்பிவட ஊா்தி எனப்படும் ரோப்காா் இயக்கப்பட்டு மலைக் கோயிலுக்கு மக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனா். காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு, கம்பிவட ஊா்தி இயக்கத்தில் நேர மாறுதல்களை கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு காா்த்திகை மாதம் முழுவதும் கம்பிவட ஊா்தி வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் இயக்கப்படும். திங்கள் முதல் வியாழக்கிழமை வரை வழக்கமான நேரப்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.