செய்திகள் :

தேனியில் கைவரிசை காட்டிய கொத்தனார் மூர்த்தி டீம்; 88 பவுனை மீட்ட காவல்துறை; சிக்கியது எப்படி?

post image

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 9 வீடுகளில் அடுத்தடுத்து தொடர் திருட்டுகள் நடந்தன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த வழக்குகளில் பெரியகுளத்தைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பலை விருதுநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பலைக் கோவை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து சிறையில் அனுப்பியிருந்தனர்.

கைதான மூர்த்தி

இந்நிலையில் தேனி பழனிசெட்டிபட்டி பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு வழக்குகளில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களில் மூர்த்தி, அம்சராஜ் ஆகியோரை காவலில் எடுத்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் தேனியில் பல்வேறு இடங்களில் திருடியதைக் குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் இருவரையும் அடைத்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "கொத்தனார் மூர்த்தி டீம் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளிலும், சிசிடிவி இல்லாத பகுதிகளையும் நோட்டமிட்டு, முகமுடி அணிந்து, வீடுகளில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதில் மூர்த்தி, அவரின் மனைவி அனிதா, சீனிதாய், லட்சுமி, சுரேஸ், அருண்குமார், மோகன் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் விருதுநகர், கோவை மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கைதான அம்சராஜ்

அவர்கள் திருட்டு வழக்குகள் தேனி திருட்டு வழக்குகளுடன் ஒத்திருந்தது. இதனால் மூர்த்தி டீம் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து மூர்த்தி மற்றும் அம்சராஜை காவலில் எடுத்து விசாரித்தபோது பழனிசெட்டிபட்டியில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 88 பவுனைப் பறிமுதல் செய்து மீண்டும் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

குஜராத்: ஐஃபோன் 16 ப்ரோவை லஞ்சமாகக் கேட்ட காவல் ஆய்வாளர்; கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தின் தொலை துறைமுகத்தில் அமைந்துள்ள மரைன் (Marine) காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் தினேஷ் குபாவட்.தினேஷ் குபாவட் ஒரு முறை துறைமுகத்தில் உள்ள லைட் டீஸல் ஆ... மேலும் பார்க்க

`இறந்தவர் 5 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார்' - யாரை தகனம் செய்தனர் குடும்பத்தினர்?

அகமதாபாத்தில் இறந்த நபர் ஒருவர், அவருடைய உடலை தகனம் செய்த 5 நாட்களுக்கு பிறகு உயிரோடு வீடு திரும்பியிருக்கிறார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.அகமதாபாத்தில் உள்ள நரோடாவின் ஹ... மேலும் பார்க்க

மைசூர் டு ஊட்டி: பார்சலில் பண்டல் பண்டலாக குட்கா; வாடகை வீட்டில் பதுக்கல் - சிக்கிய பலே ஆசாமி

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பத... மேலும் பார்க்க

மன்னார்குடி: பரிதாமாக உயிரிழந்த மருமகள்; கணவரை தாக்கிய திமுக பிரமுகர் கைது... பின்னணி என்ன?

குடும்பத்தில் பிரச்னை.. மன்னார்குடி அருணா நகரைச் சேர்ந்தவர் ஆர்.வி.ஆனந்த். இவர் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தி.மு.கவில் திருவாரூர் மாவட்ட அயலக அணி அமைப்பாளராகவும் இருக்கிறார். இவரது சகோதரி ம... மேலும் பார்க்க

சென்னை: வியாசர்பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து சோகம் - குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ்நகர், 8-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கௌசல்யா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டரை வயதில் புகழ்வேலன் ... மேலும் பார்க்க

சென்னை: ஊட்டியில் வீடு என விளம்பரம்... 1.45 கோடி ரூபாய் மோசடி - சிக்கிய பில்டர்

சென்னையைச் சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59) என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தி.நகரில் இயங்கி வந்த கட்டுமான நிறுவனம், பத்திரிகைகளில் வ... மேலும் பார்க்க