எந்த நம்பிக்கையில் இந்தியா பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை; முன்னாள் கேப்டன் அ...
மைசூர் டு ஊட்டி: பார்சலில் பண்டல் பண்டலாக குட்கா; வாடகை வீட்டில் பதுக்கல் - சிக்கிய பலே ஆசாமி
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பதுக்கி கடத்தும் முக்கிய வழித்தடமாக நீலகிரி எல்லையை கடத்தல் கும்பலைச் சேர்த்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குட்கா மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை செய்துள்ளனர். அந்த வீட்டிற்குள் பண்டல் பண்டலாக குட்கா பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த நபரிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். மைசூரில் இருந்து யாருக்கும் தெரியாமல் பார்சல் சர்வீஸ் மூலம் குட்கா பொருட்களை அனுப்பி ஊட்டியில் அவரே ரிசீவ் செய்திருக்கிறார்.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஊட்டி - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. டவுன் டி.எஸ்.பி. யசோதா உத்தரவிலும ஊட்டி நகர மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேற்பார்வையிலும் 3 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பல பண்டல்களில் 110 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த முகமது கௌசர்(38) என்பவர்
மைசூரில் இருந்து ஊட்டிக்கு செல்லக்கூடிய தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்களை பதுக்கி அனுப்பி விட்டு, ஊட்டிக்கு வந்து அவரே அந்த பார்சலைப் பெற்றிருக்கிறார். வாடகைக்கு எடுத்து வீட்டில் அதை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறார். விற்பனைக்கு வந்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அந்த நபரை சிறையில் அடைத்தோம் " என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...