புகழ் இல்லாதது என் குற்றமா? பிக் பாஸ் எலிமினேஷனுக்குப் பிறகு ரியா எழுப்பும் அடுக...
``நோயாளியின் கண்ணை எலி தின்றது" அதிர வைத்த மருத்துவர்கள்..! பீகார் மருத்துவமனையில் நடந்தது என்ன?
அரசு மருத்துவமனைகளில் இதுவரை குழந்தைகள் உள்பட எதைஎதையோ "காணாமல்" போனதாக கேள்விபட்டிருக்கிறோம். முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்த 'கண்' காணாமல் போன விசித்ரமும் அதற்கு மருத்துவர்கள் சொல்லி இருக்கும் காரணமும்தான் தற்போது மருத்துவத்துறையில் பேசு பொருளாக ஆகியுள்ளது .
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளது பிரபலமான நாளாந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை. துப்பாக்கியால் சுடப்பட்டு கடந்த 15 ம் தேதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பண்டூஸ்குமார் என்பவர். சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போய் உள்ளார்.
பிரேத பரிசோதனை வரை அவசர சிகிச்சை பிரிவிலேயே அவரது உடல் இருந்திருக்கிறது. உறவினர்களும் அதுவரையில் கூடவே இருந்துள்ளார்கள் . பிரேத பரிசோதனைக்குப்பிறகு பிணவறையில் இருந்து கொண்டு வந்த உடலை பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
பண்டூஸ்குமாரின் உடலில் இடது கண் இல்லாமல் இருந்தது கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் கேட்டதற்கு, "பிணவறையில் எலி தொல்லை அதிகமாக உள்ளது . அநேகமாக எலி சாப்பிட்டு இருக்கலாம்" என்று மருத்துவர்கள் மிகவும் சாதாரணமாக கூறியுள்ளனர்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
டாக்டர் குழு இந்த தீவிர பிரச்னை குறித்து விசாரித்து வருகிறது. தவறு நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் மருத்துவமனை கண்காணிப்பளார் பினோத்சிங் .
"மருத்துவமனை நிர்வாகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவரின் கண் எடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உடலில் சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எலிகள் கண்ணை கடித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்ணை யாராவது தோண்டி எடுத்தார்களா? அல்லது எலி தின்றதா? எல்லாம் விசாரணை அறிக்கை வந்த பிறகே அம்பலமாகும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb