செய்திகள் :

Gujarat: MBBS மாணவரின் உயிரைப் பறித்த `ராகிங்' - என்ன சொல்கிறது கல்லூரி நிர்வாகம்?

post image

குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் சீனியர்கள் ராகிங் காரணமாக முதலாமாண்டு மாணவர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனில் மெதானியா என்ற அந்த மாணவர் குஜராத் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் GMERS மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம்பெற்று சேர்ந்துள்ளார்.

கல்லூரி விடுதி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 'அறிமுகம் - Intro' செய்வதாக வன்பகடி (ராகிங்) செய்துள்ளனர். அனில் மெதானியாவை 3 மணிநேரத்துக்கும் மேலாக நிற்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். இண்ட்ரோ செய்வதாக ராகிங் செய்வது அங்கு வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

மரணம்

18 வயது இளைஞரான அனில் 3 மணிநேரம் தொடர்ந்து நின்றதினால் நிலைகுலைந்து விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் உயிரிழந்திருக்கிறார்.

அனிலின் உடலைஉடற்கூராய்வுக்கு அனுப்பியிருக்கின்றனர். அவரது மரணம் குறித்து கூடுதல் தகவல்கள் தெரிய வரலாம் என்கின்றனர்.

கல்லூரி இருக்கும் பதான் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கின்றது அனில் மெதானியாவின் குடும்பம். அனில் மயங்கிவிட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அனிலின் மரணத்தையும் அதற்கு சீனியர்களின் ராகிங்தான் காரணம் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என குரலெழுப்பி வருகின்றனர்.

Gujarat: MBBS மாணவரின் உயிரைப் பறித்த 'ராகிங்'

மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் தலைவர் ஹர்திக் ஷா, "அவர் மயக்கமடைந்தார் எனத் தெரிந்ததுமே நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்திவிட்டோம். அவர் ராகிங் செய்யப்பட்டதாகவும் 3 மணிநேரம் நிற்கவைக்கப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். நாங்கள் காவல்துறையினரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தகவல் தெரிவித்துவிட்டோம். ராகிங் குறித்து நாங்கள் கண்டிப்பான நடவடிக்கை எடுப்போம்" எனப் பேசியுள்ளார்.

காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 15 சீனியர் மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மைசூர் டு ஊட்டி: பார்சலில் பண்டல் பண்டலாக குட்கா; வாடகை வீட்டில் பதுக்கல் - சிக்கிய பலே ஆசாமி

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பத... மேலும் பார்க்க

மன்னார்குடி: பரிதாமாக உயிரிழந்த மருமகள்; கணவரை தாக்கிய திமுக பிரமுகர் கைது... பின்னணி என்ன?

குடும்பத்தில் பிரச்னை.. மன்னார்குடி அருணா நகரைச் சேர்ந்தவர் ஆர்.வி.ஆனந்த். இவர் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தி.மு.கவில் திருவாரூர் மாவட்ட அயலக அணி அமைப்பாளராகவும் இருக்கிறார். இவரது சகோதரி ம... மேலும் பார்க்க

சென்னை: வியாசர்பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து சோகம் - குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ்நகர், 8-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கௌசல்யா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டரை வயதில் புகழ்வேலன் ... மேலும் பார்க்க

சென்னை: ஊட்டியில் வீடு என விளம்பரம்... 1.45 கோடி ரூபாய் மோசடி - சிக்கிய பில்டர்

சென்னையைச் சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59) என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தி.நகரில் இயங்கி வந்த கட்டுமான நிறுவனம், பத்திரிகைகளில் வ... மேலும் பார்க்க

``நோயாளியின் கண்ணை எலி தின்றது" அதிர வைத்த மருத்துவர்கள்..! பீகார் மருத்துவமனையில் நடந்தது என்ன?

அரசு மருத்துவமனைகளில் இதுவரை குழந்தைகள் உள்பட எதைஎதையோ "காணாமல்" போனதாக கேள்விபட்டிருக்கிறோம். முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்த 'கண்' காணாமல் போன விசித்ரமும் அதற்கு மருத்துவர்கள் சொல்லி இருக்கும... மேலும் பார்க்க

`ஏன் வீட்டுக்குக் கொண்டு வந்த?' - கொலை செய்யப்பட்ட இளைஞர்; தாய், சகோதரர்கள் கைது

சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டுக்கு கோழிக்கறி வாங்கிச் சென்றதற்காக சொந்த சகோதரர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போபாலில் நடைபெற்றுள்ளது.கொலை இரண்டு மகன்களை ... மேலும் பார்க்க