செய்திகள் :

`ஏன் வீட்டுக்குக் கொண்டு வந்த?' - கொலை செய்யப்பட்ட இளைஞர்; தாய், சகோதரர்கள் கைது

post image
சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டுக்கு கோழிக்கறி வாங்கிச் சென்றதற்காக சொந்த சகோதரர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போபாலில் நடைபெற்றுள்ளது.

கொலை இரண்டு மகன்களை காப்பாற்றுவதற்காக குற்றத்தை மறைக்க முயன்றதால் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக வீட்டுக்கு வெளியில் கடைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடும் அன்ஷல் யாதவ் (கொலை செய்யப்பட்டவர்) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அசைவ உணவை வாங்கிச் சென்றதால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்துள்ளனர்.

வீட்டுக்குள் அசைவ உணவை எடுத்துவருதை அன்ஷலினின் அண்ணன் குல்தீப், தம்பி அமன் எதிர்த்துள்ளனர்.

உணவுப் பொட்டலத்துடன் சமைலறையில் சென்று அமர்ந்த அன்ஷல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனைக் காண்பித்து அமன் மற்றும் குல்தீப்பை கேலி செய்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபமடைந்த அமனும் குல்தீப்பும் கயிற்றைக் கொண்டு அன்ஷலின் கழுத்தை நெரித்துள்ளனர்.

இறந்த அன்ஷலின் உடலை அவரது சகோதரர்களும் தாய் அனிதாவும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர்.

தனியார் மருத்துவமனை சார்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அன்ஷலின் கழுத்தில் இருந்த தடம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Murder

காவல்துறையினர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும்போது, அனிதா கொலையை மறைக்க முயன்றுள்ளார். விசாரணையின் முடிவில், இரண்டு கொலைகார சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையில் அன்ஷல் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர்களது தாயிடமும் கேள்விகளை எழுப்பி மூவருமே குற்றவாளிகள் என்பதை உறுதி செய்துள்ளனர். அத்துடன் அனிதா கொலைக்கு பயன்படுத்திய கயிறையும் மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் கூறியுள்ள தகவல்களின்படி, மூன்று சகோதரர்களும் அடிக்கடி சண்டையிடுபவர்களாக இருந்துள்ளனர். மது மற்றும் பிற போதை பழக்கங்களால் சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

திருமணம் மீறிய உறவு; கண்டித்த மாமியார் உயிருடன் எரித்துக் கொலை... மருமகள் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்திருக்கும் என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், ராணி தம்பதியின் மகன் கருணாமூர்த்தி. கடலூர் அரசுக் கல்லூரியில் படித்த இவரும், அதே கல்லூரியில் படித்த ப... மேலும் பார்க்க

சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது!

நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில், பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத... மேலும் பார்க்க

நெல்லை: திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு... போலீஸார் தீவிர விசாரணை!

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்... மேலும் பார்க்க

இலக்கிலிருந்து தப்பிய சல்மான் கான்; அதன் பிறகே டார்கெட்டான பாபா சித்திக்- வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12ம் தேதி இரவு மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பா... மேலும் பார்க்க

லத்தியை பிடுங்கி காவலர்களை தாக்கிய கும்பல்; குடிபோதையில் அட்டகாசம் - ராஜபாளையம் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விசாரிக்க வந்த காவலர்களை, அவர்கள் கொண்டு வந்திருந்த லத்தியை பிடுங்கி தாக்கிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போத... மேலும் பார்க்க

UP: இடது கண்ணுக்கு பதில் வலதுபுறத்தில் அறுவை சிகிச்சை - 7 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மேற்கு கிரேட்டர் நொய்டோவில் உள்ள வணிகம் மற்றும் குடியிருப்பு பகுதி காமா 1. இந்த பகுதியிலிருக்கும் ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் நவம்பர் 12-ம் தேதி, 7 வயது சிறுவனிற்கு கண்... மேலும் பார்க்க