செய்திகள் :

Career: ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி; 5,647 இடங்கள்

post image

வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway)  ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரங்கள்:

பயிற்சி பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடங்கள்: 5,647

பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்:

Electrician / Fitter / Plumber / Painter / Welder (Gas & Electric) / Diesel Mechanic / Machinist/ Turner / Carpenter / Gas Cutter / Pipe Fitter/ A/C & Referigeration / Surveyor / Health Insperctor/COPA/Lineman/Lab Technician/ Sanitary inspector/ Mason / Draughtsman/ CAD-CAM Operator cum Programmer.

அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான காலியிட விவரங்கள் கீழே அட்டவணையில்

Slots for Apprenticeship Training

Annexures-I to VIII: பயிற்சிக்கான இடங்கள் மற்றும் பிரிவுகளின் முகவரிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Annexures-I to VIII: Slots for apprenticeship training and addresses

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். வயது வரம்பு 3.12.2024 தேதியின்படி கணக்கிடப்படும்

கல்வித்தகுதி:

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று, பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • 10 ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Lab Technician பிரிவிற்கு அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

  • ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

  • பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு பயிற்சி அளிக்கப் படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

ஆன்லைனில் www.nfr.indianrailways.gov.in என்ற இணையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது,

- www.nfr.indianrailways.gov.in இணையதளத்தில் --> General Info என்ற பிரிவுக்கு சென்று  --> Railway Recruitment Cell GHY என்பதை கிளிக் செய்யுங்கள், விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 3.12.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

 மேலும் முழு விவரங்களுக்குTrade Apprentice இந்த லிங்கை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Career: `பட்டப்படிப்பு மட்டும் படித்திருந்தால் போதும்...' - வருமான வரி தீர்ப்பாயத்தில் பணி!

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காத்திருக்கிறது பணி.என்ன பணி?சீனியர் பிரைவேட் செக்ரட்டரி, பிரைவேட் செக்ரட்டரி.மொத்த காலி இடங்கள்: 35வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: சீனியர் பி... மேலும் பார்க்க

Career: 10, 12-ம் வகுப்பு படித்தவரா? - சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காத்திருக்கிறது பணி

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - Central Leather Research Institute) பணி.என்ன பணி?ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant). மொத்த காலி பணியிடங்கள்: 5வயது ... மேலும் பார்க்க

10, 12-ம் வகுப்பு, அறிவியலில் இளங்கலை படித்திருக்கிறீர்களா? IFGTB-ல் காத்திருக்கிறது பணி!

கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு. என்ன பணி?மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க், டெக்னீஷியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Field/Lab)மொத்த காலி பணியிடங்கள்: 16வயது... மேலும் பார்க்க

Career: இந்தியத் துறைமுகங்களில் Executive பணிகள்; Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியத் துறைமுகங்கள் சங்கத்தில் (Indian Ports Association) காலியாகவுள்ள அசிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய வ... மேலும் பார்க்க

COAL INDIA: `640 காலியிடங்கள்’ - B.E/B.Tech தகுதிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் "COAL INDIA" பொதுத்துறை நிறுவனத்தில் Management Trainee பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்த விவரங்கள்:பணிய... மேலும் பார்க்க

கோவை மக்களுக்கு... கோவை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

கோவையில் சமூக நலத்துறையில் 'ஒன் ஸ்டாப் சென்டரில்' தற்காலிக ஒப்பந்தப் பணி. என்ன பணி? கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளர்.மொத்த காலி பணியிடம்: 5வயது வரம்பு: 21 - 40சம்பளம்: கேஸ் பணியாளர... மேலும் பார்க்க