பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?
Career: இந்தியத் துறைமுகங்களில் Executive பணிகள்; Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியத் துறைமுகங்கள் சங்கத்தில் (Indian Ports Association) காலியாகவுள்ள அசிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரங்கள்:
1. பணியின் பெயர்: Assistant Executive Engineer (Civil)
காலியிடங்கள்: 25
சம்பள விகிதம்: ரூ.50,000 - 1,60,000.
கல்வித்தகுதி: Civil Engineering பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் பணி செய்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Junior Executive (Civil)
காலியிடங்கள்: 8.
சம்பள விகிதம்: ரூ. 30,000 - 1,20,000.
கல்வித்தகுதி: Civil Engineering - B.E./B.Tech பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: மேற்கண்ட இரு பணிகளுக்கும் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.
EXS மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் CBT தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் பாடப் பிரிவுகள், மதிப்பெண்கள் விவரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்குத் தெரிவிக்கப் படும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ipa.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 20.11.2024
மேலும் முழு விபரங்களுக்கு Advt.No.2024/SGR/01 என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.