தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!
Sri lanka: இலங்கையின் புதிய பிரதமராகப் பதிவியேற்ற ஹரிணி அமரசூரிய! - யார் இவர்?
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றது. இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அதில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார்.
இவருக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றிருக்கிறார். கலாநிதி ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் சமூகவியலும், ஆத்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானிடவியலும் படித்திருக்கிறார். இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
சமூக நலன், எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் ஆர்வலராக இருந்திருக்கிறார். மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். அரசியல் பின்புலம் ஏதும் இவருக்கு இல்லை. 2019 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
தற்போது இலங்கையின் 16 வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். ஹரிணி அமரசூரியவை பொறுத்தவரை தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாமல் பிரதமர் ஆன முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...