செய்திகள் :

குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு

post image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்தக் குழு சமா்பித்த அறிக்கையில், ‘மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த சாத்தியமுள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..

இந்த மசோதாவானது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லி கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட கிரண் ரிஜிஜு பேசியதாவது:

”நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும், மற்ற 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமையிலான குழுவினரின் அறிக்கையை நான் நம்புகிறேன். அந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நாம் ஒரே நாடு என்பதால், ஒரே தேர்தலை நடத்தி நாம் அனைவரும் ஒன்றாக வாக்களிக்க வேண்டும்.

நாடாளுமன்ற அவைகள் நவம்பர் 25ஆம் தேதி கூடுகிறது. பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் எனத் தெரிகின்றது.

ஏற்கெனவே, கேரளம், தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலையில்லா திண்டாட்டத்தில் மக்கள்... அதானிக்கு வேலை செய்யும் அரசு! ராகுல்

மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் உள்ள நிலையில், மோடி அரசும், மகாராஷ்டிர அரசும் அதானிக்காக வேலை செய்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தே... மேலும் பார்க்க

மோசடிகளை நினைத்து பயப்பட வேண்டாம்! ஆதார் எண்ணை பாதுகாக்க வழி இருக்கு!!

ஒவ்வொருவரின் அடையாளமாக மாறிவிட்ட ஆதார் எண்ணை வைத்து பல மோசடிகள் நடப்பதாக செய்திகள் வரும்போது பயப்படுவதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது, நமது ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறையை ஒவ்வொருவரும் ... மேலும் பார்க்க

தேர்தல் களத்தில் மறைமுகமாக பாஜகவை வலுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முழுவீச்சில் பிரசரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவ. 20 ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ராணுவ தளபதி உள்பட 6 தீவிராதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி, 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க

திரைப்பட நாயகி! தன்னந்தனியாக உத்தரகண்ட் கிராமத்தில் வாழும் 80 வயதுப் பெண்!

உத்தரகண்ட் மாநிலம், கட்திர் என்ற கிராமமே ஏதோ பேய் படங்களில் வரும் கிராமத்தைப் போல காணப்பட்டாலும், அந்த கிராமத்துக்கு இன்னமும் உயிர்த் துடிப்பாய் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஹீரா தேவி. இவருக்கு வயது 80. இவர... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் ... மேலும் பார்க்க